உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறை அச்சம் காரணமாக இந்தியாவில் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஜூலை 1 முதல் முழுமையாக நீக்கப்படவுள்ளன.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்ட சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத் தடைகளைத் தொடர்ந்து, உள்நாட்டு எரிபொருள் தேவையைப் பாதுகாப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசால் இந்த அவசரகால நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக் கட்டுப்பாடுகள் ஜூலை 1 முதல் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு
