கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், திறமைசாலிகள் ஆகிய 3 துறைகளுக்கு சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 1995ம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கல்வி மூலம் வளமான நாட்டை வளர்க்கும் திட்டத்தை முதன்முறையாக முன்வைத்தது. 2002ம் ஆண்டில், திறமைசாலிகளின் மூலம் நாட்டை வளர்க்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. 2012ம் ஆண்டில் அறிவியல் புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து, 2022ம் ஆண்டில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், திறமைசாலி ஆகியவற்றைக் கொண்ட ஒருமைப்பாட்டு நெடுநோக்கு திட்டம், நவீனமயமான நாட்டை பன்முகங்களிலும் கட்டுவதற்கான அடிப்படை ஆதாரமாகும் என்று அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முதன்முறையாகத் தெரிவித்தார்.
சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் மைய ஆதார அமைப்பு முறையாக, இத்திட்டம், சர்வதேச போட்டியைச் சமாளிப்பதற்கு மட்டுமல்ல, தேசிய மறுமலர்ச்சிக்காகவும் செயல்படுத்தப்படுகிறது. முறையான ஒன்றிணைப்பு என்பது, இத்திட்டச் செயலாக்கத்தின் இரகசியம். அரசு உருவாக்கிய மேடை, தொழில் நிறுவனங்கள் வழங்கிய பயன்பாட்டு வாய்ப்பு, பல்கலைக்கழகங்கள் பயிற்றுவித்த திறமைசாலிகள் ஆகிய 3 துறைகள், தொழில்-கல்வி-ஆய்வு அமைப்பை உருவாக்கியுள்ளன.
சீனாவில் கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், திறமைசாலிகள் ஆகியவை, தனியாக இயங்கும் மறைமுகமான அமைப்பு முறை அல்ல. திறப்பு, ஒன்றிணைப்பு மற்றும் இயக்க நிலையில் முன்னேறும் புத்தாக்க அமைப்பு முறை அதுவாகும். எடுத்தக்காட்டாக, சீன-ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் கூட்டுப் பயிற்சி பெறுவது, சீன-வெளிநாட்டு பல்கலைக்கழகக் கூட்டு ஆய்வகங்களில் தொழில் நுட்பச் சிக்கல்களைச் சமாளிப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் ஒத்துழைப்பு கூட்டாளிகளின் இளைஞர்கள், சீனாவில் எண்ணியல் பொருளாதார வகுப்பில் ஈடுபடுவது முதலியவை, சீனாவின் விவேகம், உலகின் தேவையுடனான ஆழ்ந்த ஒருங்கிணைப்பை வெளிக்காட்டுகின்றன.