பிரபல தமிழ் நடிகையின் ஆபாச வீடியோ.. பகீர் சம்பவம்..!!

Estimated read time 0 min read

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சுனைனா. தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது முகத்தை ஆபாசமான உள்ளடக்கத்தில் பொருத்தி, சிலர் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இணையதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுனைனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பரவி வரும் வீடியோக்கள் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டவை அல்லது மாற்றியமைக்கப்பட்டவை என்றும், அவற்றுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அருவருப்பான, தீய நோக்கம் கொண்ட செயலால் நான் வெறுப்படைந்துள்ளேன். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உள்ளடக்கத்தை உருவாக்கவோ, வெளியிடவோ, பரப்பவோ நான் எந்தவிதமான ஒப்புதலும் அளிக்கவில்லை. இதனுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. இந்தச் செயல் எனது கண்ணியம், தனியுரிமை மற்றும் அடையாளத்தை மீறுவதாகும். இது பாலியல் துன்புறுத்தலாகவும், அவதூறாகவும் அமைகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 உள்ளிட்ட இந்தியச் சட்டங்களின்படி இது குற்றமாகும். இத்தகைய செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோக்களை உருவாக்குவது, பதிவேற்றுவது, பகிர்வது, மற்றவர்களுக்கு அனுப்புவது அல்லது மறுபதிவு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கெனவே பதிவிட்டுள்ளவற்றை நீக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த வீடியோக்களை உருவாக்கியவர்கள், வெளியிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது முன்னறிவிப்பின்றி சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வீடியோக்களைத் தொடர்ந்து பகிர்பவர்களும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பொதுமக்களும் ஊடகங்களும் இதுபோன்ற வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்றும், அவை எங்கு தென்பட்டாலும் புகார் அளிக்க வேண்டும் என்றும் சுனைனா கேட்டுக்கொண்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக நடிகை சுனைனா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author