பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிகழ்வில் ராமதாஸின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த மாதம், டாக்டர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது சுசீலாவுடன் அவர் திருமண நாளைக் கொண்டாடியதாகப் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
பாமகவின் மூத்த உறுப்பினர்கள் சிலர், பல ஆண்டுகளுக்கு முன்பே டாக்டர் ராமதாஸ் சுசீலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்
