ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமாகி அறுவை சிகிச்சை செய்த நிலையிலும், அவர் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தாலும், அவை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டே வந்தன.
இந்நிலையில், தொடர் போராட்டத்திற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
