நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

Estimated read time 1 min read

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நேற்று (அக்.29) நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (அக்.30) காலை 08.30 மணியளவில் அதேபகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அக்.31- ஆம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, அடுத்த 2 நாட்களில் இது மேற்கு- வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று (அக்.30) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல், நாளை (அக்.31) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்றும் (அக்.30), நாளையும் (அக்.31) சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று (அக்.30) அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு-மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (அக்.31) தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு-மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு-மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author