டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

Estimated read time 0 min read

டெல்லியில் இன்று நடைபெறும் இண்டி கூட்டணியின் பேரணியால், வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்னிறுத்தி, டெல்லியில் இண்டி கூட்டணி சார்பில் இன்று கண்டனப் பேரணி நடைபெறுகிறது. பண்டிகைக் காலமான தற்போதைய சூழலில் நடைபெறும் இந்த பேரணியால் போக்குவரத்து முடங்கி, கடைகளுக்கு மக்கள் வர முடியாத நிலை ஏற்படும் என்பதால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்கினால் இந்தப் போராட்டம் உடனடியாக முடிவுக்கு வரும் என பதிலளித்துள்ளார்.

வியாபாரிகளின் வாழ்வாதார பிரச்சனைக்கு, ராகுல் காந்தி இவ்வாறு பதிலளித்திருப்பது அவரது அகங்காரத்தைக் காட்டுவதாக கூறி வணிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author