மையத்துவ அதிகாரம் என்ற ஜனநாயகக் கோட்பாடு:சீனப் பாணி ஆட்சிமுறையின் மையம்

மையத்துவ அதிகாரம் என்ற ஜனநாயகக் கோட்பாடு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை அமைப்புமுறையின் கோட்பாடாகவும் தலைமை விதிமுறையாகவும் உள்ளது. கொள்கைத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன் பரந்தளவில் கருத்துக்களைக் கேட்டறிந்து முழுமையாகக் கலந்தாய்வு செய்து அனைவரின் அறிவுத்திறமைகளையும் தொகுத்து, கொள்கை தீர்மானம் மேற்கொண்டதற்குப் பின், அனைத்து வலிமைகளையும் பயன்படுத்தி ஒருங்கிணைப்பாகச் செயல்பட வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் கருப்பொருளாகும். இது பல்வகை கருத்துக்களுக்கும் ஒன்றுபட்ட தீர்மானத்துக்கும் இடையில் நிலையான சமநிலையை எட்ட முயற்சிக்கின்றது. இந்தக் கோட்பாடு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறு ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சிப் போக்குடன் இடைவிடாமல் மேம்பட்டு வருகின்றது.

முற்றிலும் சுதந்திரம், இல்லையெனில் முற்றிலும் அதிகாரக் குவிப்பு என்ற இருமை எதிர்ப்புப் பொறியிலிருந்து இந்தக் கோட்பாடு விடுபட்டுள்ளது. ஒருபுறம், பரந்த அளவில் பொது மக்களிடமிருந்து திறமைகள் உட்புகுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், அறிவியல் ரீதியில் உயர் செயல்திறன்களுடன் செயல்படுவதன் மூலம் உட்பகை சச்சரவு தவிர்க்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்காக ஆட்சி புரிந்து நாட்டுக்காகச் சாதனை புரிந்து, சமூகத்தின் நீண்டகால அமைதி, நிதானம் மற்றும் செழிப்பான வளர்ச்சிக்கான அமைப்புமுறை தான், சிறந்த அமைப்புமுறையாகும் என்பதை நடைமுறைகள் நிரூபித்துள்ளன. இது, சீனப் பாணி ஆட்சி முறையின் மையமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author