சீனாவும் ஐரோப்பாவும் உயர் தர வர்த்தகக் கூட்டாளிகளாகும்:லெகார்டே

சீன-ஐரோப்பிய வர்த்தக மற்றும் முதலீட்டு கலந்தாலோசனை அமைப்புமுறையின் 2ஆவது கூட்டம் கடந்த வாரத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஏற்றுமதி கட்டுப்பாடு,உலக வர்த்தக அமைப்பின் சீர்த்திருத்தம் உள்ளிட்ட கருப்பொருள் பற்றி இரு தரப்புகள் மொத்தம் 16 உடன்பாடுகளை எட்டியுள்ளன.

இது பற்றி ஐரோப்பிய மத்திய வங்கியின் இயக்குநர் லெகார்டே அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என்னுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,

நடப்பு கலந்தாய்வில் பெற்றுள்ள முன்னேற்றங்கள் மிக ஆக்கப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்காலத்தில் இத்தகைய பேச்சுவார்த்தைகள் மேலும் ஆழமாக மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பாவும் சீனாவும் உயர் தர சரக்குகள் மற்றும் சேவை வர்த்தகக் கூட்டாளிகளாகும். இரு தரப்புகளுக்கும் இடையில் பொது நலன்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒத்துழைப்பு மேற்கொள்வது சரியான திசையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author