வார விடுமுறையை ஒட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்கள் சந்தையில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்ததாலும் , காசிமேட்டில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் களைகட்டியுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்தவாரம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் இன்று காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
பொதுவாகவே காசிமேடு மின்கள் சந்தையில் , கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் அப்படியே விற்பனைக்கு வருவதாலும், மற்ற இடங்களை விட விலை குறைவாக இருக்கும் என்பதாலும், பலவகை மீன்கள் ஒரே இரத்தில் கிடைக்கும் என்பதாலும், சுற்றுவட்டரங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் இங்கி வருவர். அத்துடன் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் இங்கு மொத்தமாக ஏலம் விடப்படும். அதனால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு வியாபாரிகளும் மீன்களை வாங்கி செல்வதற்காக காலை முதலே காசிமேட்டில் குவிவது வழக்கம். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வெறிச்சூடிய காசிமேடு மீன் சந்தை, இன்று அதிகாலை முதலே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டத்தில் காசிமேடு சந்தையில் திருவிழா போல காட்சி அளிக்கிறது.
மேலும், கடந்த வாரம் 1600 ரூபாயிலிருந்து 1700 ரூபாய் வரை விற்பனையான வஞ்சிரம் மீன்கள் இந்த வாரம் ரூ.1000 – ரூ.900 என்கிற விலையில் விற்பனையாகிறது. இதேபோல் பாறை, கொடுவா, கடம்பா ஆகிய மீன்களும் கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ. 1000 வரை விலை குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.