சீனத் தேசிய திரைப்படப் பணியகம், சீன ஊடகக் குழுமம் ஆகியவை கூட்டாக நடத்தும் சீனத் திரைப்பட நுகர்வு ஆண்டு என்ற நடவடிக்கை ஏப்ரல் 18ம் நாள் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. சமூக நுகர்வு முன்னெடுப்பில் திரைப்படத்தின் பங்கை வெளிக்கொணர்வது, இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
சீனத் திரைப்பட நுகர்வு ஆண்டு, திரைப்படச் சந்தையின் உயிராற்றலை முன்னேற்றுவதோடு, நுகர்வுக்கு பேரூக்கம் அளித்து, திரைப்படத் துறையின் உயர்தர வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் துணை புரியும். இந்நடவடிக்கையின் போது, திரைப்பட நுகர்வு தொடர்பான பயனுள்ள சலுகைகள் பல, பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.