வசந்த விழாவின் போது நுகர்வை தூண்டும் நடவடிக்கைகள்

Estimated read time 1 min read

 

2026ஆம் ஆண்டு வசந்த விழா விடுமுறையில் நுகர்வைத் தூண்டி மக்களின் கலாச்சார வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில், ஒன்பது நாள் சிறப்பு ஷாப்பிங் நடவடிக்கையைச் சீனா தொடங்க உள்ளது என்று சீன வணிக அமைச்சகம் 2ஆம் நாள் தெரிவித்தது.

பிப்ரவரி 15 முதல் 23ஆம் நாள் வரை நடைபெறும் இந்த நடவடிக்கை, உணவு, தங்குமிடம், போக்குவரத்து, சுற்றுலா, பொருட்கள் வாங்குதல், பொழுதுபோக்கு உள்ளிட்ட ஆறு துறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தும். மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பணம் செலுத்தும் முறையை எளிதாக்கி, அவர்கள் சுமுகமான மற்றும் தடைமற்ற அனுபவம் பெறச் செய்யும் வகையில், வங்கி அட்டைகள், செயலி மூலம் பணம் செலுத்தும் சேவை, ரொக்க பணச் சேவை ஆகியவற்றைச் சீனா தொடர்ந்து மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author