நேபாளத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் வீடு ஒன்று அடியோடு பெயர்ந்து ஆற்றில் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. pic.twitter.com/8Rg8q1Ybr4
— Suresh Elangovan (@sureshelangov12) September 28, 2026
நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக நீடிக்கும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காணாமல் போயுள்ளனர். 49 மாவட்டங்களுக்கு பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளன. 2 நேபாளத்தில் மலையோரப் பகுதியில் உள்ள வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தனர். 3 முக்கிய நதிகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டிச் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 4 நேபாளத்தில் பெய்து வரும் தொடர் மழை சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மீட்புக் குழு தயார்நிலையில் உள்ளது.
புட்வாலில் சுமார் 1,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு மற்றும் நிலச்சரிவுகளால் சாலைகள், நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஹிம்லுங் ஹிமாலில் ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 12 பேரைக் காணவில்லை என மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கின் பாதிப்பிலிருந்தே நேபாளம் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அங்கு பேரிடர் ஏற்பட்டுள்ளது.
