சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆஸ்திரேலியாவின் 110 இளம் மாணவர்களுக்கு அக்டோபர் 28ஆம் நாள் அனுப்பிய பதில் கடிதத்தில், சீன-ஆஸ்திரேலிய நட்பு இலட்சியத்தில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளித்தார்.
சீனாவில் நடைபெற்ற சீன-ஆஸ்திரேலிய இளைஞர்(பல்கலைக்கழக மாணவர்) நட்பார்ந்த துடுப்பு படகோட்டம் மற்றும் டிராகன் படகுப் போட்டியில் நீங்கள் சீன மாணவர்களுடன் போட்டியிட்டு, பரிமாற்றம் செய்ததோடு, நப்புறவை உருவாக்கி, நல்ல நினைவுகளை மனதில் வைத்திருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
சீனா-ஆஸ்திரேலியா இடையே நட்பு தொடர்பு வாழையடி வாழையாக நிலவி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இருநாடுகளின் நட்புறவுக்கு நீங்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி, சீன-ஆஸ்திரேலிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
