‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்குப் பிறகு, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மே 7ஆம் தேதி தொடங்கியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டன.
பின்னர், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மூலமாக பதிலடி கொடுக்க முயன்ற போதும், இந்திய மூப்படைகளால் இவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
