9வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி அண்மையில் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. ஐ.நாவின் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம் இதில் முதன்முறையாக கலந்து கொண்டது. இந்த அலுவலகத்தின் தலைவர் அலெக்சாண்டர் டி க்ரூ நடப்புப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது அவர் கூறுகையில், சீனாவின் உயிராற்றல், உலகத்துக்கான திறப்பு மனப்பாங்கு, உலகத்துக்குச் சந்தையைப் பகிர்ந்து கொள்ளும் சீனாவின் மனவுறுதி ஆகியவற்றை உணர்ந்து கொண்டேன். அத்துடன், வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை இப்பொருட்காட்சி வழங்கியுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, இப்பொருட்காட்சியின் மூலம், வெளிநாட்டு வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதோடு, வேறு நாடுகள் வர்த்தகத்தில் கலந்து கொள்வதற்கு இப்பொருட்காட்சி உதவியளிக்கிறது. இது சீனாவுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் நன்மை புரியும் என்றும் தெரிவித்தார்.
1965ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐ.நாவின் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம், வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கின்ற தலைமை நிறுவனமாகும். 1979ஆம் ஆண்டு, இந்த அலுவலகத்தின் சீனாவுக்கான பிரதிநிதி பிரிவு பெய்ஜிங்கில் அமைக்கப்பட்டது. இது குறித்து அலெக்சாண்டர் டி க்ரூ கூறுகையில், வெளிநாட்டுத் திறப்புப் பணி உள்ளிட்ட சீனாவின் பல சீர்திருத்தங்களில் ஐ.நாவின் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம் கலந்து கொண்டுள்ளது. தற்போது, இரு தரப்புக் கூட்டாளி உறவு நெடுநோக்கு அர்த்தமுள்ள புதிய கட்டத்தில் உள்ளது. ஷாங்காய் மாநகரில் உலகளாவிய தொடரவல்ல வளர்ச்சி மையத்தை உருவாக்குவோம். இதன் மூலம், கடந்து 50 ஆண்டுகளாக இரு தரப்புகளின் அனுபவங்கள் உலகத்துக்குப் பகிர்ந்து கொள்ளப்படுவதோடு, சீனாவின் சீர்திருத்த வழிமுறை, தொழில் துறை வளர்ச்சி முறையின் மாற்றம் ஆகிய அனுபவங்கள் பரவல் செய்யப்பட்டு, இதர நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
