நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர்.
https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz
கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் மாணவிகள் கேரளத்தின் பாரம்பரிய உடை அணிந்து கல்லூரி வளாகத்தில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களான திருவோண நடனம், மோகினியாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி மாணவிகள் மகிழ்ந்தனர். இதில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.