9வது ஹோங்ச்சியௌ சர்வதேசப் பொருளாதார மன்றக்கூட்டத்தின் கிளை கருத்தரங்கு

Estimated read time 1 min read

9வது ஹோங்ச்சியௌ சர்வதேசப் பொருளாதார மன்றக்கூட்டத்தின் “மக்களுக்குப் பயனளிக்கும் உயர்தரத் திறப்பு: சீன மேசைகளில் உலகளாவிய சுவைகள்”என்ற தலைப்பிலான கிளை கருத்தரங்கு நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. அரசாங்கப் பிரிவுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், வேளாண் மற்றும் உணவுத் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்தனர்.

முதன்மை சொற்பொழிவுகள், நடைமுறை ஆய்வுகள், வட்ட மேசை உரையாடல்கள் முதலியவை இக்கருத்தரங்கில் இடம்பெற்றன. வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் வளர்ச்சிப் போக்கு, வர்த்தகத்தின் வசதிமயமாக்கம், விநியோகச் சங்கிலிகள் சரிப்படுத்தல், தானிய அமைப்புமுறையின் மீள்தன்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விருந்தினர்கள் விவாதம் நடத்தி, சீன-வெளிநாட்டு வேளாண் மற்றும் உணவுத் துறைகளுக்குப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேடையை உருவாக்கினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author