சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனத் துணைத் தலைமையமைச்சரும், 2ஆவது சீன-கனடா பொருளாதாரம் மற்றும் நிதி நெடுநோக்கு பேச்சுவார்த்தையின் சீனத் தரப்புத் தலைவருமான ஹே லிஃபேங், இப்பேச்சுவார்த்தைக்கான கனடாத் தரப்பு தலைவரும், கனடா நிதித் துறை அமைச்சருமான ஷாம்பெயின், கனடா சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் சித்து ஆகியோருடன், 9ஆம் நாள், வான்கூவர் நகரில், 2ஆவது சீன-கனடா பொருளாதாரம் மற்றும் நிதி நெடுநோக்கு பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினார்.
ஹே லிஃபேங் கூறுகையில், இரு தரப்புகளின் தலைவர்களுக்கிடையில் முக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக இப்பேச்சுவார்த்தை விளங்கும். கனடாவுடன் இணைந்து, பொருளாதார மற்றும் வர்த்தகம், நிதி, முதலீடு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-கனடா பொருளாதாரத்தின் நிதானமான, சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையின் போது, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறக் கூடிய சாதனைகளையும் ஒத்த கருத்துக்களையும் இரு தரப்பும் எட்டியுள்ளன.
