இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனப் போக்குவரத்து துறையின் செயல்பாட்டுத் தரவுகளைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் நவம்பர் 29ஆம் நாள் வெளியிட்டது.
ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனாவில் ஒட்டுமொத்தப் போக்குவரத்து தொகை 2 கோடியே 87 இலட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.7 விழுக்காடு அதிகமாகும்.
அதன் வளர்ச்சி விதிகம், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தை விட 0.1 சதவீத புள்ளிகள் அதிகம். அக்டோபர் திங்களில், சீனாவில் ஒட்டுமொத்தப் போக்குவரத்து தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.7 விழுக்காடு அதிகமாகும். அதன் வளர்ச்சி விகிதம், ஜூன் மாதத்திற்குப் பிறகு மிக உயர்வான பதிவாகும்.
இவ்வாண்டின் இறுதியில் உற்பத்தி மற்றும் நுகர்வு உச்ச பருவத்தை நெருங்கி வருவதால், போக்குவரத்து துறையின் செயல்பாட்டு வளர்ச்சி போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்லபாட்டுச் சூழலின் கண்ணோட்டத்தில் கூடுதல் கொள்கைகளை செயல்படுத்துவதை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பல பிராந்தியங்கள் மற்றும் பல துறைகள் அதிகரித்து வருகின்றன. பயனுள்ள தேவைக்கான உள்ளார்ந்த ஆற்றலை மேலும் திறக்க இது துணை புரிகின்றது. போக்குவரத்து துறையின் தொடர்ச்சியான மீட்புக்கு வலுவான ஆதரவை வழங்குகிறது.