சீன-துருக்கி பசுமை மேம்பாட்டு வணிக கருத்தரங்கில் சீனத் துணை அரசுத் தலைவர் பங்கெடுப்பு

சீனத் துணை அரசுத் தலைவர் ஹெங்சேங், துருக்கி தலைநகரில், அந்நாட்டின் துணை அரசுத் தலைவர் யெல்மஸுடன் இணைந்து, உள்ளூர் நேரப்படி 9ஆம் நாளில், சீன-துருக்கி பசுமை மேம்பாட்டு வணிக கருத்தரங்கில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.

ஹெங்சேங் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலின் கீழ், இரு தரப்புறவு சீராக வளர்ந்து வருகிறது. துருக்கியுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி, சீன-துருக்கி நெடுநோக்கு ஒத்துழைப்பு உறவை மேலும் உயர் நிலைக்கு தூண்ட சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

சீனா-துருக்கி இடையே பசுமை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து ஹெங்சேங் 3 ஆலோசனைகளை வழங்கினார். முதலாவதாக, பசுமை மேம்பாட்டு நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்த வேண்டும். அடுத்ததாக, பசுமை தொழில் நுட்பத் துறைகளின் ஒத்துழைப்புகளை விரைவுபடுத்த வேண்டும். மூன்றாவதாக, பல தரப்புவாத ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author