“பழனி கந்தசஷ்டி விழாவில் 15-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 3 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்பிறகு கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். இதனால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் அன்று இரவு தங்கரத புறப்பாடும் நடைபெறாது”
