தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்திற்கான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 7.35 டி.எம்.சி. தண்ணீரை, காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடப்பாண்டில் இதுவரை 158 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும் என்ற நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தமிழ்நாட்டுக்கு 315.76 டி.எம்.சி. நீர் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.
