ஐசிசி தலைவராக ஜெய் ஷா 2வது முறையாக போட்டியின்றி தேர்வு!

Estimated read time 1 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் வாரியக கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒருமனதான முன்மொழிவைத தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ஜெய் ஷாவின் தலைமையின் மீது ஐசிசி வாரியம் வைத்துள்ள முழு நம்பிக்கையை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது.

உலகளவில் கிரிக்கெட்டை விரிவுபடுத்துதல், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல், வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துதல் ஆகியவையே ஐசிசியின் அடுத்தகட்ட முக்கிய இலக்குகளாக உள்ளன.

இந்த மறுதேர்வு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய ஜெய் ஷா, “ஐசிசி வாரியம் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றிகள். 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் களமிறங்குவது, புதிய ரசிகர்களையும் அடுத்த தலைமுறை வீரர்களையும் உருவாக்கக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். மக்களை ஒன்றிணைப்பதே கிரிக்கெட்டின் மிகப்பெரிய பலம்; வெறும் போட்டிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல், வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருவதே எங்களின் முதன்மை நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author