தாறுமாறாக குறைந்த தங்கம் விலை!

Estimated read time 1 min read

தங்கம் விலையானது குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு வலுபெற்று வருவதே இதற்கு முக்கிய காரணம். டாலர் மதிப்பு கூடுவதால் முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற பங்குச்சந்தைகளின் பக்கம் தங்களது முதலீட்டை திருப்பி வருவதால், தங்கத்தின் மீதான டிமாண்ட் குறைந்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்த சரிவு, இத்துடன் முடிந்துவிட்டதா? என்றால் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். கடந்த சில மாதங்களாகவே உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை, பண வீக்கம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது தான் ஏற்றம் காண தொடங்கியிருக்கிறது.

இதனால் இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து ஒரு சவரன் ரூ. 90 ஆயிரம் வரை விற்கப்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும், திடீரென போர் பதற்றங்கள் போன்ற சூழல் ஏற்பட்டால் இந்த கணிப்புகள் பொய்யாகலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இன்று (நவம்பர் 16) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ரூ.12,540-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து, ரூ.1,00,620-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.190-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,90,000-க்கு விற்பனையாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author