சீனாவுக்கு வரும் பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளியுறவு ஆலோசகர்

பிரான்ஸ் நாட்டு அரசுத் தலைவரின் வெளியுறவு ஆலோசகர் எம்மானுவேல் போன் அக்டோபர் 9 முதல் 13ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் அக்டோபர் 8ஆம் நாள் கூறுகையில், போன் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் புதிய சுற்று சீன-பிரான்ஸ் நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்துவார். கூட்டு அக்கறைக் கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் பற்றி இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் போது, இரு அல்லது பல தரப்புப் பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சீன-பிரான்ஸ் மற்றும் சீன-ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author