இந்தியர்களைப் பற்றி வெளிநாட்டுப் பெண் சொன்ன ஆச்சரியமான உண்மை….!!” 

Estimated read time 1 min read

போர்ச்சுகலில் இருந்து ஆஸ்திரேலியா வரை தனியாகப் பயணம் செய்து வரும் வெளிநாட்டுப் பெண் ஒருவர், தான் இந்தியாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், பல்வேறு ஆபத்துகள் காத்திருப்பதாகவும் வெளிநாடுகளில் பரப்பப்பட்ட வதந்திகளைக் கேட்டு அவர் ஆரம்பத்தில் இங்கு தனியாகப் பயணம் செய்ய மிகவும் பயந்துள்ளார்.

ஆனால், தனது பயணத்தின் போது இந்திய மக்கள் தமக்கு வழங்கிய அன்பையும், எதிர்பாராத உதவிகளையும் பார்த்த பிறகு இந்தியாவின் மீதான அவரது ஒட்டுமொத்தப் பார்வையும் முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக, அவரிடம் இருந்த தொலைபேசியில் கோளாறு ஏற்பட்டபோது, சில விநாடிகளில் அங்கு வந்த சில முகம் தெரியாத நபர்கள் இரண்டு மணி நேரம் செலவழித்து அவளுக்கு உதவியது அவரது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இந்தச் சிறப்பான அனுபவங்களைக் குறிப்பிடும் அதேவேளையில், இந்தியா முழுவதும் முழுமையான பாதுகாப்புடன் உள்ளது என்றோ அல்லது அனைவரும் எந்தவித அச்சமுமின்றி சுற்றலாம் என்றோ அவர் கூறவில்லை. குறிப்பாக, பெரிய நகரங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் அனைவரும் உரிய எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், வெறும் பயத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு இந்தியாவின் கலாச்சாரத்தையும் இங்கிருக்கும் நல்ல மனிதர்களையும் அனுபவிக்கும் வாய்ப்பை யாரும் இழந்துவிடக் கூடாது என்று அவர் உற்சாகமூட்டியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Ana

🇵🇹

🌱

| Hitchhiking from Portugal to Australia

🇵🇹

🇦🇺

👍

(@the_sustainable_backpacker)

“>

சரியான விழிப்புணர்வுடன் இருந்தால், இந்தியாவில் கிடைக்கும் மனிதர்களின் அன்பும் ஆதரவும் ஒரு தனித்துவமான பயண அனுபவத்தைத் தரும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

You May Also Like

More From Author