இரு நாடுகள் திட்டம்” என்பதை நடைமுறைப்படுத்துவது மத்தியக் கிழக்குப் பிரச்சினை தீர்வுக்கான ஒரே வழி – சீனப் பிரதிநிதி

“இரு நாடுகள் திட்டம்” என்பதை நடைமுறைப்படுத்துவது மத்திய கிழக்குப் பிரச்சினை தீர்வுக்கான ஒரே ஒரு வழி என்று ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஃபுஸ்வுன் 17ஆம் நாள் பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்சினை பற்றிய பாதுகாப்பவையின் பொது விவாதக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த சில பத்து ஆண்டுகளாக, பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே கொந்தளிப்பான நிலைமை நிலவி வருகின்றது. “இரு நாடுகள் திட்டம்” என்பதை நடைமுறைப்படுத்தாததே அதற்கான மூலக் காரணமாகும். சுதந்திர நாட்டைக் கட்டியமைக்கும் பாலஸ்தீன மக்களின் தேசிய உரிமைக்கு உத்தரவாதம் கிடைக்கவில்லை. காசா என்பது பாலஸ்தீனத்தின் காசா மட்டுமே. பாலஸ்தீன மக்களின் காசாவாகும். பாலஸ்தீனம் என்னும் சுதந்திர நாட்டைக் கட்டியமைப்பதற்கும், பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்தை நிர்வகிப்பதற்கும் சீனா உறுதியாக ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், “இரு நாடுகள் திட்டம்” என்பதை நடைமுறைப்படுத்துவதற்குரிய குறிப்பிட்ட காலத்தவணையையும் நெறிவரைபடத்தையும் வகுக்கும் வகையில், மேலும் பெருமளவிலான அதிகாரம் மற்றும் பயனுடன் கூடிய சர்வதேச அமைதிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஃபுஸ்வுன் வேண்டுகோள் விடுத்தார். அதோடு,
நிலையான போர் நிறுத்தத்தை உடனடியாக நனவாக்குவது உயிரைக் காப்பாற்றுவதற்குரிய கட்டாய முன்நிபந்தனையாகும் எனக் குறிப்பிட்ட அவர், மனிதநேய உதவிகளின் நுழைவு அனுமதியை விரிவாக்குவது மனிதாபிமான பேரழிவைத் தளர்த்துவதற்கான அவசர தேவையாகும் என்றும் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author