கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அங்கு தொடர் மழை பெய்துவருகிறது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.
