சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கம்போடியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு நிகழ்வு, உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 13ஆம் நாள் புனோம் பென் நகரில் தொடங்கியது.
ஷிச்சின்பிங்கின் கலாசார நெருக்கம், எதிர்காலத்துக்கு முன்னேறிய சீனா உள்ளிட்ட ஏழு சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கம்போடியாவின் முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைய்சியோங், கம்போடியத் தேசிய தொலைக்காட்சி நிலையத்தின் தலைவர், கம்போடியாவின் அப்சரா தொலைக்காட்சி நிலையத்தின் தலைவர் ஆகியோர், காணொளி வழியாக உரை நிகழ்த்தினர்.