#BREAKING : மூத்த திரைப்படப் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி காலமானார்..!

Estimated read time 1 min read

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், ‘பொம்மை’ இதழின் ஆசிரியருமான பொம்மை சாரதி (93) காலமானார்.

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், 85 ஆண்டுகாலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு சேவையாற்றியவருமான பொம்மை சாரதி காலமானார்.

தனது பயணத்தை ‘பேசும்படம்’ இதழின் துணை ஆசிரியராகத் தொடங்கிய இவர், ‘பொம்மை’ & ‘மங்கை’ இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்

இவர் தனது பத்திரிகைப் பணியை புகழ்பெற்ற ‘பேசும்படம்’ இதழின் துணை ஆசிரியராகத் தொடங்கினார். பின்னர் ‘பொம்மை’ திரைப்பட இதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்த இதழைத் தமிழ்த் திரையுலகின் முக்கிய அடையாளமாக மாற்றினார்.பெண்களுக்கான முன்னணி இதழான ‘மங்கை’ இதழின் தலைமை ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் தொடங்கி பல தலைமுறைத் திரைப்படக் கலைஞர்களுடன் நெருங்கிய நட்பும், திரையுலக வரலாற்றை ஆவணப்படுத்திய அனுபவமும் கொண்டவர்.

அவரது மறைவுக்குத் திரையுலகினரும் பத்திரிகையாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author