சீன-தென் கொரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான 2ஆவது காலகட்டப் பேச்சுவார்த்தை நிறைவு

சீன வணிகத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச வாரியத்தின் பொறுப்பாளர் ஒருவர் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, சீன மற்றும் தென் கொரிய அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில், சீன-தென் கொரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான 2ஆவது காலகட்டப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி, 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. அண்மையில், இப்பேச்சுவார்த்தை சாரம்ச ரீதியில் நிறைவடைந்து, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

2ஆவது காலக்கட்டப் பேச்சுவார்த்தையை இரு தரப்பும் சாரம்ச ரீதியில் முடித்துக்கொண்டு, முதலீடு மற்றும் வர்த்தகச் சேவைத் துறையின் ஒத்துழைப்புகளைச் சிறப்பாக விரைவுபடுத்தியுள்ளன. மேலும், தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்க நிலைகளை மேலும் ஆழமாக்கி, இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி, இரு தரப்புகளுக்கிடையில் நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிதானமாக வளர்ந்து வருவதற்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வர இப்பேச்சுவார்த்தை பெரிதும் உதவியுள்ளது. அதோடு, இரு தரப்பும் பலதரப்புவாதத்தை செயல்படுத்தி, தாராள வர்த்தகத்தை முன்னேற்றுவதற்கான பயனுள்ள நடவடிக்கையாகவும் இது திகழும் என்று அப்பொறுப்பாளர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author