ஒத்துழைப்புக்கான அழைப்பில் சீனா வழங்கும் வாய்ப்புகள்

Estimated read time 1 min read

2026 ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய முக்கிய உரை, சர்வதேசச் சமூகத்தில் பெரும் மறுமொழி மற்றும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த உரை, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் கூட்டுச் செழுமையை ஊக்குவிப்பதற்குரிய திசையைக் காட்டுவதோடு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவதிலும் சீனா வழங்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதிலும் பல்வேறு தரப்புகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்று கருதப்படுகிறது.

தற்போதைய சிக்கலாக மாறி வரும் சர்வதேசச் சூழ்நிலையில், திறப்பு அல்லது மூடல், ஒத்துழைப்பு அல்லது பிளவு, சீர்திருத்தம் அல்லது பழமைவாதம் ஆகியவற்றுள் எது தேவை? எனும் கேள்விக்கு மூன்றாவது முறையாக ஏபெக் அமைப்பின் தலைமை பதவி வகிக்கும் நாடான சீனா தெளிவான பதிலை அளித்துள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தனது உரையில் சீனாவின் குறிப்பிட்ட மாறாத நிலைப்பாடுகளை விளக்கிக் கூறியதோடு, புதிய கருத்து மற்றும் திட்டங்களையும் முன்வைத்துள்ளார். விரிகுடா பகுதி ஒத்துழைப்புக்கான உலகக் கூட்டமைப்பை உருவாக்குவதைச் சீனா ஆதரிப்பதாக ஷிச்சின்பிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இது, திறந்த ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் முக்கிய நடவடிக்கையாக, விரிகுடா பகுதிகளுக்கிடையேயான பரிமாற்றத்தை ஆழமாக்கவும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் உதவும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டமானது, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பும், உலகளாவிய தொழில் மற்றும் வணிகத் துறையுடன் ஒத்துழைப்பதற்கான அழைப்பும் ஆகும் என்றும் ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார். பல்வேறு நாடுகளின் தொழில் மற்றும் வணிக துறையினர்கள் சீனாவில் முதலீட்டை அதிகரித்து சீனச் சந்தையை ஆழமாக ஆராயும் நம்பிக்கை இதனால் மேலும் வலுவடைந்துள்ளதாக ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டில் பங்கேற்ற பல விருந்தினர்கள் தெரிவித்தனர்.

நடப்பு ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டை வாய்ப்பாக கொண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாடு தொடர்ந்து முன்னேற்றப்பட்டு, பல்வேறு நாடுகளின் தொழில் மற்றும் வணிக துறைகள் சீனாவின் நவீனமயமாக்கம் கொண்டு வரும் வாய்ப்புகளை நன்கு பகிர்ந்து கொள்ளும். சர்வதேச நிலைமை எப்படி மாறினாலும் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைத்து கூட்டு வெற்றி பெறுவதற்கான சீனாவின் மன உறுதி மாறாது என்பதைக் காலம் மெய்ப்பிக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author