உலக வர்த்தக அமைப்பின் விதிமுறை மற்றும் சீர்திருத்தம் பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு செப்டம்பர் 27ஆம் நாள் பிற்பகல் 8ஆவது பயிலரங்கு நடத்தியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இப்பயிலரங்கிற்குத் தலைமை தாங்கியபோது, பலதரப்புவாதத்துக்கு ஆதாரத்தூணாகவும், உலகப் பொருளாதார மேலாண்மைக்கு முக்கிய அரங்காகவும் உலக வர்த்தக அமைப்பு திகழ்கிறது.
பொறுப்புணர்வு மற்றும் புத்தாக்க எழுச்சியுடன் உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் சர்வதேசப் பொருளாதார விதிமுறை மாற்றத்தில் மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு மூலம் ஆழ்ந்த நிலையிலான சீர்திருத்தம் மற்றும் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலக வர்த்தக அமைப்பில் இணைவது, சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் சொந்த வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, உலகிற்கும் நன்மை புரிந்துள்ளதை உண்மைகள் நிரூபித்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் பங்கெடுத்து, இவ்வமைப்பை மையமாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையை உறுதியுடன் பேணிக்காக்க வேண்டும். தாராள வர்த்தகம் மற்றும் உண்மையான பலதரப்புவாதத்தை ஆதரித்து, ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்பு வாதத்தை எதிர்க்க வேண்டும். சீனா உள்பட வளரும் நாடுகளின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.