வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யத் தேவையான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டமானது பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சொர்க்கவாசல் பிரவேச தரிசன டோக்கன் வழங்கும்போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
டிசம்பர் 30, 31, ஜனவரி ஒன்று ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கு தேவையான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் எனக் கூறிய அவர், பெயர்களைப் பதிவு செய்து கொண்ட பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஜனவரி 2ஆம் தேதி முதல் எட்டாம் தேதிவரை வழக்கமான நடைமுறையில் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுச் சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
