இந்தோனேசிய அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

 

ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சீனாவுக்கு வருகை தந்துள்ள இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோவுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 20ஆம் நாள் முற்பகல் ஷென்சென் மாநகரில் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பின் போது இருநாட்டு பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதாக இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக சீன-இந்தோனேசிய உத்திப்பூர்வ பரஸ்பர நம்பிக்கை வலுவடைந்து வருகிறது என்றும், பரஸ்பர நன்மை தரும் ஒத்துழைப்பின் சாதனைகள் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், இருநாடுகளின் உத்திப்பூர்வ தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பன்முக உத்திநோக்கு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சீனா-இந்தோனேசியா பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை புதிய நிலைக்கு ஊக்குவிக்கவும் வேண்டும் என்றும் அவர் கூறினார். பலதரப்பு கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், ஒற்றுமை மற்றும் உத்திப்பூர்வ சுயாட்சியை வலுப்படுத்த ஆசியானுக்கு ஆதரவளிக்கவும், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காக்கவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒற்றுமை மற்றும் சுய வலிமையை வழிநடத்தவும், உலகளாவிய ஆளுகையை மேம்படுத்தவும், இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author