சீனாவின் மிகப் பெரிய கடல் சார் எண்ணெய் வயலான போஹாய் எண்ணெய் வயலில் 2025ஆம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி அளவு 4 கோடி டன்னை எட்டி, வரலாற்றில் புதிய சாதனையைப் பெற்றது.
தேசிய எரியாற்றல் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சி ஆகியவற்றுக்கு இது உறுதியான உத்தரவாதம் அளித்துள்ளது என்று சீனா தேசிய கடல்சார் எண்ணெய் நிறுவனம் டிசம்பர் 21ஆம் நாள் தெரிவித்தது.
போஹாய் எண்ணெய் வயல், சீனாவில் மிக பெரிய அளவிலான கடல் சார் எண்ணெய் வயலாகும். கடந்த 5 ஆண்டுகளில், போஹாய் எண்ணெய் வயலிலுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி அளவு சராசரியாக ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகமாகும். கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு அளவு, முழு நாட்டில் இருந்ததில் சுமார் 40 விழுக்காடு வகித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எண்ணியல் மற்றும் நுண்ணறிவுமயமாக்கம் வாய்ந்த வளர்ச்சி முறை மாற்றமும், பசுமையான மற்றும் கார்பன் குறைந்த வளர்ச்சியும் போஹாய் எண்ணெய் வயலில் முன்னேற்றப்பட்டு வருகின்றன. சீனா தயாரித்த முதலாவது தொகுதியான ஆழமற்ற நீர் பகுதியில் உற்பத்தி சாதனங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.
