சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு, ஜுன் 30ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. வெள்ளப்பெருக்கு தடுப்பு மற்றும் வறட்சி சமாளிப்பு பணி குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இவ்வாண்டு வெள்ளப்பெருக்கு அதிகமாக நிகழும் காலத்தில், தீவிரமான கால நிலை சூழல் அடிக்கடி ஏற்படக் கூடும். வெள்ளப்பெருக்கும் வறட்சியும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு வாரியங்கள், கடுமையான வெள்ளப்பெருக்கு, வறட்சி, சூறாவளி ஆகியவற்றைத் தடுக்கும் பணியில் கவனம் செலுத்தி, ஆயத்தம் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
