சீன அரசவை செய்தி அலுவலகம் செப்டம்பர் 22ம் நாள், 15வது ஐந்தாண்டு திட்டம் பற்றிய செய்தியாளர் கூட்டம் நடத்தி, இயற்கை வளங்களின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாட்டு நிலைமையை அறிமுகப்படுத்தியது.
தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், 2030ம் ஆண்டு வரை, தேசிய கடல் சார் மொத்த உற்பத்தி மதிப்பு 13 இலட்சம் கோடி யுவானைத் தாண்டும் என்றும், நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள கடல் சார் பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சி மற்றும் திறப்பு நிலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், மதிப்பீட்டின்படி, கடல் சார் உயிரியல் மருத்துவத் தொழிலின் கூடுதல் மதிப்பு 13 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி, 2025ம் ஆண்டை விட சுமார் 30 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், கடல் பரப்பில் காற்று ஆற்றல் மின்சார உற்பத்தியின் மொத்த திறன் ஒரு மடங்கு உயர்ந்து 10 கோடி கிலோவாட்டை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
படம் VCG
