ஜப்பானுக்குக் குடிமைப் பயன்பாடு மற்றும் இராணுவப் பயன்பாடு என இரட்டை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இரட்டைப் பயன்பாட்டு பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாட்டைச் சீனா சமீபத்தில் நடைமுறைப்படுத்தியது.
இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களுளில் பேரழிவுகளை ஏற்படுத்தும் வடிவமைப்பு, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் அவற்றை ஏற்றிச்செல்வதற்குரிய கருவிகள், தொழில் நுட்பம், சேவை, இவை தொடர்புடைய தொழில் நுட்பத் தகவல்கள் உள்ளிட்டவைகள் அடங்கும்.
ஜப்பானின் தலைமையமைச்சராகச் சனா தக்காயிச்சி பதவி ஏற்ற பிறகு, அந்நாடானது சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட்டு வருவதோடு, சீனா மீது ஆயுத ஆற்றலைப் பயன்படுத்தும் அச்சுறுதலையும் விடுத்து வருகின்றது.
இது குறித்து, சீன வணிகத் துறை 6ஆம் நாள் தொடர்புடை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் இராணுவமயமாக்கத்தில் மீண்டும் ஈடுபடுவதையும், அணு ஆயுதங்களைக் கையாள்வதற்கான சூழ்ச்சியையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனத் தரப்பு நியாயத்துடன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை இன்றியமையாத ஒன்று என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், சர்வதேசச் சமூகம் கையோடு கை கோர்த்து, நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஜப்பானின் இராணுவ விரிவாக்கத்தைத் தடுத்து, உலகின் நீண்டகால அமைதி மற்றும் பொதுப் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
