உலகளாவிய கடல் மீன்வள நிர்வாகத்திற்கான இளைஞர் முன்மொழிவு ஷாங்காய் மாநகரில் வெளியீடு

உலகளாவிய கடல் மீன்வள நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கான தொடர் நடவடிக்கைகள் அண்மையில் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றன. இதில் உலகளாவிய கடல் மீன்வள நிர்வாகத்திற்கான இளைஞர் முன்மொழிவு வெளியிடப்பட்டது.

ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளை இளைஞர்கள் எதிர்நோக்க வேண்டும். சட்டப்பூர்வமற்ற மீன்பிடிப்புத் தடுப்பு உள்ளிட்டவற்றில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பொது பரவல், தொண்டர் சேவை முதலியவற்றில் இளைஞர்கள் ஈடுபட்டு, பொறுப்பு ஏற்கும் கட்டமைப்பைக் கூட்டாக விரைவுபடுத்த வேண்டும் என்று இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் இளைஞர்களின் பார்வையில், சீன மீன்வளத்துக்கான மனப்பதிவு எனும் கண்காட்சியும் இதில் வெளியிடப்பட்டது.

வியட்நாம், இந்தோனேசியா, மியன்மார், தோங்கா, லாவோஸ்,பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகளின் இளைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author