பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின் போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25-வது உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 அன்று உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கிற்கு செல்கிறார்.
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடி 4 நாள் அரசுமுறை பயணம் செல்கிறார்
