திருக்கார்த்திகை தினத்தையொட்டி சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
