தியேட்டர்களில் திருவிழா கோலம்! – நவம்பர் 27-ல் ஒரே நாளில் மோதும் 13 தமிழ் படங்கள்..!

Estimated read time 1 min read

ஒரே நாளில் 13 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளைப் பெறுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி வெளியான தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி நடித்த ‘ஓம்’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்து தொடர்ந்து ஓடுகிறது. விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’, கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஆகிய படங்களும் திரையரங்குகளில் உள்ளன. இதனால் சில படங்கள் கடைசி நேரத்தில் வெளியீட்டைத் தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 27-ஆம் தேதி ‘டெலிவரி பாய்’, ‘நிறம்’, ‘மௌன மொழிகள்’, ‘நெல்லை பாய்ஸ்’, ‘சிக்னல் அட் 11:30’ உள்ளிட்ட 13 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. ஏற்கனவே தனுஷ், விஜய் ஆண்டனி படங்கள் ஓடுவதால் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த வார வெளியீடுகளையும் சேர்த்து, 2026-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ‘606’, ‘சிட்டுக்குறிஞ்சி’, ‘டெலிவரி பாய்’, ‘கோ 2 கோ’, ‘ஜெடூசி’, ‘மதுர மோசடி’, ‘மின்னும் ஓர் இரவு’, ‘மௌன மொழிகள்’, ‘நெல்லை பாய்ஸ்’, ‘பேய் பிடிச்சிருக்கு’, ‘நிறம்’, ‘வட மஞ்சுவிரட்டு’, ‘சிக்னல் அட் 11:30’ ஆகியவை வெளியாகும் படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author