மின்னணு தகவல் உற்பத்தி துறையின் 15வது ஐந்தாண்டுத் திட்டம் வெளியீடு

சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகியவை இணைந்து அண்மையில் மின்னணு தகவல் உற்பத்தி துறை வளர்ச்சிக்கான 15வது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டன.

இதில் 2030ஆம் ஆண்டுக்குள் சீனாவின் மின்னணு தகவல் உற்பத்தி துறை உயர்தர வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்று, உலகளாவிய தொழில் அமைப்பில் முக்கிய பங்கை வகிக்கும் என்ற இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானைத் தாண்டிய தொழில் நிறுவனங்களின் வருமானம் 30 லட்சம் கோடி யுவானைத் தாண்டுவது, ஒருங்கிணைந்த சுற்றுகள், மேம்பட்ட கம்ப்யூட்டிங் முதலிய துறைகளில் சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முதலீட்டு அளவு 3.5 சதவீதத்தை எட்டுவதோடு, தொழில்துறை புத்தாக்கச் செயல்திறனை முன்னேற்றுவது, அடுத்த தலைமுறை அறிவார்ந்த செயலிக்கான பயன்பாட்டு விகிதத்தை அதிகரிப்பது ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author