2025ம் ஆண்டு சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி, செப்டம்பர் 10ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள ஷோ காங் மண்டலத்தில் துவங்கியது.
85 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 2000 தொழில் நிறுவனங்கள் நடப்பு பொருட்காட்சியில் கலந்து கொள்கின்றன. சேவை வர்த்தகப் பொருட்காட்சி, உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சேவை வர்த்தகத்தை இணைக்கும் செயல்திறன் வெளிக்காட்டப்படுகிறது.
இப்பொருட்காட்சி துவங்கிய முதல் நாளில், மொத்தம் 12 தொழில் நிறுவனங்களும் அமைப்புகளும், 25 புதிய சாதனைகளை வெளியிட்டுள்ளன. நுகர்வு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகள், இப்புதிய சாதனைகளுடன் தொடர்புடையவை என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
படம்:VCG