சீனாவின் ஷென்ச்சோ-24 விண்கலம் ஏவுதல் வெற்றி

Estimated read time 1 min read

சீனாவின் ஜுயு ச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து 2026ம் ஆண்டு நவம்பர் 25ம் நாள் காலை 8 மணி 18 நிமிடத்தில், லாங்மார்ச்-2 எஃப் ஏவூர்தி மூலம் மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்ச்சோ-24 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 10 நிமிடங்களுக்குப் பிறகு, இவ்விண்கலம் ஏவூர்தியிலிருந்து விலகி, திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அனைத்து விண்வெளி வீரர்களும் நலமாக உள்ளனர். இந்த ஏவுதல் பணி வெற்றி பெற்றுள்ளது என்று சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பணியகம் தெரிவித்தது.

ஷென்ச்சோ-24 விண்கலம், சுற்று வட்டப்பாதையில் நுழைந்த பின், திட்டமிட்டபடி விண்வெளிநிலையத்துடன் தானாகவும் விரைவாகவும் இணைக்கும். அதிலுள்ள விண்வெளி வீரர்கள் சீன விண்வெளிநிலையத்துக்குள் நுழையவுள்ளனர். சீன விண்வெளி பயணத்தில் வெளிநாட்டு வீரர் பங்கெடுத்தது இது முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்:ICPhoto

Please follow and like us:

You May Also Like

More From Author