புதிய தொழில் நுட்பப் பயன்பாடு மற்றும் மேலாண்மை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

புதிய அறிவியல் தொழில் நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி மேலாண்மை செய்ய வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் 24ஆம் நாள், ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற ஒரு பொது விவாதத்தில் உரைநிகழ்த்திய போது வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது, புதிய சுற்று தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழில் துறையின் மாற்றம் வேகமாக நடைபெற்று வருவது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு முன்கண்டிராத வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் கொண்டு வந்துள்ளது. பல்வேறு நாடுகள் ஒன்றுமையுடன் ஒத்துழைத்து, புதிய தொழில் நுட்பங்கள் எப்போதும் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் சரியான திசையை நோக்கி சீராக வளர்வதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

புத்தாக்கத் திறன் மற்றும் பொறுப்புணர்வு கொண்ட பெரிய நாடான சீனா, தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து, மேலும் நியாயமான, நேர்மையான உலகளாவிய தொழில் நுட்ப மேலாண்மை முறைமையை உருவாக்கி, தொழில் நுட்பப் புரட்சி மூலம், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு வலிமையான உந்து ஆற்றலை கொண்டு வர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author