வியட்நாமில் ஷிச்சின்பிங்கின் கருத்து தொகுப்பு பற்றிய கருத்தரங்கு

மனித உரிமைகளுக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பது பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து தொகுப்பு எனும் புத்தகம் தொடர்பான கருத்தரங்கு நவம்பர் 24ஆம் நாள் வியட்நாமின் தலைநகர் ஹானோயில் நடைபெற்றது.

சீன மனித உரிமைகள் ஆய்வு கழகம், வியட்நாமிலுள்ள சீனத் தூதரகம், சீன சர்வதேச தொடர்புகள் குழுமம், வியட்நாமின் ஹோ சி மின் தேசிய அரசியல் கழகத்தின் மனித உரிமைகள் ஆய்வகம் ஆகியவை கூட்டாக நடத்திய இக்கருத்தரங்கில் இருநாடுகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட நிபுணர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டு, மனித உரிமைகளை மேம்படுத்தி உத்தரவாதம் செய்வது பற்றிய கருத்துகள் மற்றும் நடைமுறை அனுபவங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மனித உரிமைகளுக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பது பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து தொகுப்பு எனும் புத்தகம் அடுத்தட்டுத்து 13 வெளிநாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டு, உலகின் மனித உரிமைகள் துறையிலும், அறிவியல் துறை, கல்வித் துறை, சிந்தனை கிடங்குகள், ஊடகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரமுகர்களிடமும் அதன் மீதான கவனம் மற்றும் ஆய்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author