திமுகவில் சீனியர்களுக்கு ‘செக்’….? பதவி விலகும் துரைமுருகன்….?

Estimated read time 0 min read

சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, திமுகவில் மிகப்பெரிய உள்கட்சி கட்டமைப்பு மாற்றங்கள் மிகத் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், வயது மூத்த சீனியர் நிர்வாகிகள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து தாமாகவே முன்வந்து ஒதுங்கிக் கொள்ளும் புதிய திட்டம் ஒன்று அறிவாலய வட்டாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அதிரடி வியூகத்தின் முதல் கட்டமாக, திமுகவின் தூண்களில் ஒருவரான பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

துரைமுருகனின் இந்த திடீர் முடிவுக்கு அவரது தற்போதைய உடல்நலக்குறைவும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டாலும், தேர்தல் தோல்விக்கு பிறகான திமுகவின் இந்த அதிரடி நகர்வு உற்றுநோக்கத்தக்கதாக மாறியுள்ளது. இதனையடுத்து, கட்சிக்கு மிகவும் பலம் வாய்ந்த அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற விவாதம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அந்த வகையில், தற்போது திமுகவின் பொருளாளராகப் பொறுப்பு வகித்து வரும் சீனியர் தலைவர் டி.ஆர். பாலு, அடுத்த பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் மிக பலமாகத் தெரிவித்து வருகின்றன.

You May Also Like

More From Author